- சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தின் அப்டேட், இன்று காலை 11. 04 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே ஜி ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.
- இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4500க்கும் மேற்பட்ட வி.எப்.எக்ஸ் (VFX) காட்சிகளை கொண்ட, இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக, அயலான் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அயலான் திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாததால், படத்தின் சிஜிஐ காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளதாகவும் கே ஜி ஆர் ஸ்டுடியோஸ் கூறியுள்ளது.