#BREAKING | அதானி குழுமம் மீதான புகார்.. ஹிண்டன்பெர்க் அறிக்கையை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு - உச்சநீதிமன்றம் உத்தரவு

Update: 2023-02-17 10:58 GMT
  • அதானி குழும புகார் - ஹிண்டன்ப்ர்க் அறிக்கை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.
  • இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணரப்பட வேண்டும். குழுவுக்கு தலைமை ஏற்கும் ஓய்வு பெற்ற நீதிபதியின் உச்ச நீதிமன்றமே முடிவு செய்யலாம்: மத்திய அரசு
  • சீலிட்ட உறையில் மத்திய அரசு அளிக்கும் ஆலோசனை ஏற்க மாட்டோம்.
  • கொஞ்சம் விவகாரத்தில் வெளிப்படுத்த தன்மை இருக்க வேண்டும்: நீதிபதிகள்
  • இந்த விவகாரத்தில் முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய அவசியமுள்ளது. குழுவை நாங்களே ஏற்படுத்துகிறோம்: நீதிபதிகள்
  • ஒட்டுமொத்த விவகாரத்தையும் உயர் அதிகாரம் படைத்த குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்: மனுதாரர் விஷால் திவாரி
  • உச்சநீதிமன்ற கண்காணிப்பில், அதானி குழும புகார் - ஹிண்டன்ப்ர்க் அறிக்கை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்: மனுதாரர் பிரசாந்த் பூஷண்
  • பொதுமக்களின் லட்சக்கணக்கான கோடி ரூபாயை மோசடி செய்த விவகாரத்தில் அதானி குழுமத்துக்கு எதிராக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ, அமலாக்கத் துறை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம், மத்திய நேரடி வரிகள் வாரியம்,இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம், இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றைக் கொண்டு விசாரிக்க உத்தரவிட வேண்டும்: காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் தரப்பு வாதம்
  • இந்த விவகாரத்தில் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தோல்வியென கருத முடியாது: நீதிபதிகள்
  • இந்த விவகாரம் தொடர்பான குழுவில் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி யாரும் இடம் பெற மாட்டார்: தலைமை நீதிபதி
Tags:    

மேலும் செய்திகள்