- 12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக, தொழிற்சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
- தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், அதனை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா கடந்த 21ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது
- . இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
- இந்த நிலையில், மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினரின் கருத்துக்களை அறியவும் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
- சென்னை தலைமை செயலகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு கருத்துக்களை கேட்டறிகின்றனர்.
- தமிழகத்தில் உள்ள முக்கிய தொழிற்சங்கத்தினர், இதில் பங்கேற்கின்றனர்.