திடுக்கிடும் முடிவுகள்! ஐநா போட்ட கணக்கு! அறிவித்த 120 நாடுகள்.. மீண்டும் தீ முட்டிய கனடா, அமெரிக்கா

Update: 2023-10-28 07:21 GMT

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஜோர்டான் வரைவுத் தீர்மானம் கொண்டு வந்தது... இந்த வரைவுத் தீர்மானம் காசாவிற்குள் தடையில்லா மனிதாபிமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது... இந்தியாவைத் தவிர, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் இத்தீர்மானத்தின் மீது வாக்களிக்கவில்லை. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்த நிலையில், இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளன. வாக்கெடுப்பிற்கு முன்பு, கனடாவும், அமெரிக்காவும் ஒரு திருத்தத்தை வலியுறுத்தின. அதில், அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை ஐநா பொதுச்சபை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது என்றும், ஹமாசால் பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை சர்வதேச சட்டத்திற்கு இணங்க மனிதாபிமானத்துடன் நடத்துவதுடன், அவர்களை உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய அழைப்பு விடுப்பது குறித்தும் அந்தத் தீர்மானத்தில் ஒரு பத்தியை இணைக்க வேண்டும் என திருத்தத்தை மேற்கொள்ளக் கோரி வலியுறுத்தப்பட்ட நிலையில், இந்தியா உள்ளிட்ட 87 நாடுகள் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தன... 55 உறுப்பு நாடுகள் எதிராக வாக்களித்தன... மற்றும் 23 நாடுகள் வாக்களிக்கவில்லை. இதையடுத்து திருத்த வரைவை ஏற்க முடியாது என ஐநா பொதுச்சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் அறிவித்தார். மிகப்பெரிய ஆதரவோடு போர் நிறுத்தம் தொடர்பான வரைவுத் தீர்மானம் ஐநாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்