இஸ்ரேலுக்கு இஸ்லாமிய நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்யக் கூடாது என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அழைப்பு விடுத்துள்ளார்... இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுடன் உறவு கொண்டுள்ள இஸ்லாமிய நாடுகள், உடனடியாக உறவைத் துண்டிக்க வேண்டும் என்றும், இஸ்ரேல் தூதரக அதிகாரிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், எண்ணெய் உள்ளிட்ட வர்த்தக உறவை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்...