முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி

Update: 2024-08-29 06:08 GMT

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து துபாய் சென்று, அங்கிருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவுக்கு சென்றடைந்தார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் உள்ளிட்டோர் வரவேற்றனர். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். நாளை மறுநாள், புலம்பெயர்ந்த தமிழர்களை முதலமைச்சர் சந்தித்துப் பேசுகிறார். வரும் செப்டம்பர் 2-ம் தேதி, சான்பிரான்சிஸ்கோவிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் சிகாகோ செல்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்