``IMF உடன்படிக்கையை மாற்ற முடியாது; சிக்கலில் இலங்கை..'' ரணில் விக்ரமசிங்க
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும், அவ்வாறு நடந்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வரிகளை குறைப்பதாகவும், பொருட்களின் விலைகளை குறைப்பதாகவும் தமது கொள்கைப் பிரகடனங்களில் சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திஸாநாயக்கவும், மக்களை ஏமாற்றி நாட்டை பாழ்படுத்த முயற்சிப்பதாகவும், இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.