வங்கதேசத்தில் 5-வது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா..! | Bangladesh | Sheikh Hasina

Update: 2024-01-08 07:51 GMT

வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். வங்கதேசத்தில், 12ஆவது பொதுத்தேர்தல் முடிந்து நேற்று வாக்கப்பதிவு எண்ணப்பட்டது. இந்த தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் பார்ட்டி தேர்தலை புறக்கணித்த‌தால், ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. இதன்மூலம், ஐந்தாவது முறையாக பிரதமராக ஷேக் ஹசீனா பொறுப்பேற்க உள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு முதல், தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து பிரதமராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்