ரஷ்யா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதி ஏற்படுவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முயற்சியாகவும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்பைன் ரிசார்ட்டில் உலக
தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசித்தனர். இதில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் மற்றும் ஜெர்மன் அதிபர் உள்ளிட்ட 90 நாடுகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். இருநாடுகளிடையேயான போரால் எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம், அணு ஆயுத பயன்பாடு குறித்த அச்சம் உள்ளிட்டவை குறித்து தங்கள் கருத்துகளைஉலக தலைவர்கள் எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தை
சீனா புறக்கணித்த நிலையில் நேரத்தை வீண்டிப்பதாக கூறி ரஷ்யாவும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.