ரூ. 21,000 கோடி ஹெராயின் சிக்கிய வழக்கில் திடீர் திருப்பம்
குஜராத்தின் முத்ரா துறைமுகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
குஜராத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் சிக்கிய வழக்கில் டெல்லி கேளிக்கை விடுதி உரிமையாளர் உள்பட 4 பேரை தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.
குஜராத்தின் முத்ரா துறைமுகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
ஆப்கான், ஈரான் வழியாக இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் குறித்து விசாரணையை மேற்கொண்ட தேசிய புலனாய்வு பிரிவு கடந்த மார்ச் மாதம், 11 ஆப்கானியர்கள் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இப்போது இந்த வழக்கில் 20 இடங்களில் சோதனையை நடத்திய என்.ஐ.ஏ. , அதிரடி திருப்பமாக டெல்லியை சேர்ந்த ஹர்பிரீத் சிங் தல்வார் மற்றும் பிரின்ஸ் சர்மாவை கைது செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
இதில் தல்வார் டெல்லியில் Playboy Club-பை நடத்தி வருகிறார் என தெரியவந்துள்ளது.
இருவரும் ஆப்கானிலிருந்து கடல் வழியாக ஹெராயின் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி, அரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் போதைப்பொருளை சப்ளை செய்திருக்கிறார்கள்; போலி செல் நிறுவனங்கள் வாயிலாக இறக்குமதி செய்யப்பட்ட போதைப்பொருட்களை டெல்லியிலிருக்கும் ஆப்கானியர்கள் வாயிலாக பிரித்து வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.