ஈரான் அதிபர் செய்யது இப்ராஹிம் ரைசியுடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் சிக்கலான சூழ்நிலை மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். பயங்கரவாத சம்பவங்கள், வன்முறை மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பு குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் இருதரப்புக்கும் உள்ள ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.