கனமழையால் அமெரிக்காவின் நியூயார்க் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. சாலை போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு மாதம் பெய்யும் மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்ததே வெள்ளத்திற்கு காரணம் என்றும் கால நிலை மாற்றமே இதற்கு காரணம் எனவும் நியூயார்க் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.