ஆஸ்திரியா நாட்டுக்கு கொண்டாட்ட பயணம்...அதிசயங்களை ஆளும் இயற்கை தேசம்

Update: 2024-09-29 08:20 GMT

"யப்பா… விட்டா விடிய விடிய ஊரை வருனிச்சுட்டு இருப்ப போலயே… சீக்கிரம் சுத்தி காட்டுயானு…" திட்டுற உங்க மைண்ட் வாய்ஸ்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்… அதுனால ஊருக்குள்ள இறங்கி அலப்பறைய ஸ்டார்ட் பண்ணலாம் வாங்க…

லண்டன்ல இருக்க ஈஃபில் டவர்ல ஏறி பாத்தா ஒட்டு மொத்த இங்கிலாந்தையே பாக்கலாம்னு… நான் சின்ன வயசுல இருக்கும் போது… பெரியவங்க சொல்லுவாங்க… அது உருட்டுனு நான் பெரியவனா ஆனதுக்கு அப்புறம் தான் தெரியும்….

ஆனா அந்த உருட்ட சாத்தியப்படுத்திருக்கு schafberg மலை….

மலைமேல இருந்து நாட்டோட ஒட்டுமொத்த ரம்மியத்த ரசிக்கலானு சொன்னதால... கூட்சு வண்டியில ஜன்னல் ஓரமா ஒரு சீட்ட புடிச்சி உக்காந்த உடனே வண்டி மலமேல போக போக…

வழி எல்லாம் இயற்கையின் படைப்புகள் நம்மோட கண்ணுக்கு விருந்தளிக்க, கொஞ்ச நேரத்துலயே மலைமேல வந்தாச்சு...

வாவ்... மேல நின்னு பாக்கும் போது… கடவுள் இந்த நாட்ட அழகா செதுக்கி வச்சுட்டாருனுதான் சொல்லனும்… மலை ஓரத்துல நதிய உரசிட்டு இயற்கையோட இயற்கையா ஒன்றி இருக்குற வீடுகள பாக்குறப்போ… ரெண்டு கண்ணு பத்தாது, தலைக்கு பிண்ணாடி கூட ரெண்டு கண்ணு படைச்சுருக்கலாம்னு தோனும்… குடுத்த காசுக்கு வொர்த் தான் பா....

Tags:    

மேலும் செய்திகள்