மாச கடைசியில் மாஸ் சமையல்... ரசம், சாம்பாருக்கு செம்ம சைடிஸ்... நாவூற வைக்கும் இத்தாலி நாட்டு சமையல்...
மாச கடைசி வந்தா கூடவே சேந்து வறுமை நிறம் சிகப்பும் வந்துடும்.... அதுனால நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி... சர்வதேச சமையல்ல இன்னைக்கு நாம சமைக்க இருக்கும் ரெசிபி... இத்தாலி மக்களின் ஃபேவரைட் ரெசிபியாக இருக்கும்.. Butter Garlic Egg...
அதாவது நம்ம வீட்டுலாம்... ரசம் சாப்பாட்ட தொட்டுக்க பொடி மாஸ்... முட்டை பொறியல் செஞ்சு குடுக்குற மாதிரி... இட்டாலி மக்கள் தங்களோட சாப்பாட்டுக்கு தொட்டுக்க யூஸ் பண்ற ஆகாரம் தான்... Butter Garlic Egg... முக்கியமா இதை பால் ஊத்தி சமைக்கிறதுனால... இதோட டேஸ்ட் தனியா தெரியுமாம்...
சரி சாப்பாட்டையே புகழ்ந்துட்டு இருந்தா எப்போ சாப்பிட்றதுனு... பசியோட பேசுற உங்களோட மைன்ட் வாய்ஸ் எனக்கும் கேக்குது அதுனால... சட்டுனு சமையல் கலத்துல இறங்கி சமைக்க ஆரம்பிக்கலாம் வாங்க...
Butter Garlic Egg சமைக்க தேவையான பொருட்கள்... முட்டை, பால், உப்பு, மிளகு தூள், வெண்ணை, பூண்டு, கார்ன்பிளார் மாவு, சில்லி ஃப்ளேக், கொத்தமல்லி, கரம் மசாலா... அவளோ தான் இனி சமையலை ஸ்டார்ட் பண்ணிடலாம்...
முதல்ல ஒரு பாத்திரத்துல 4 முட்டைய ஒடச்சு ஊத்திக்கனும்... பிறவு உடைச்சு ஊத்துன முட்டைலயே அரை ஸ்பூன் உப்பையும்.. கால் ஸ்பூன் மிளகுதூளையும் பர பரனு தூவி விட்டு... நல்லா மிக்ஸ் பண்ணிக்கனும்...
அடுத்து சூடேறிய பான் பாத்திரத்துல ஒரு ஸ்பூன் வெண்ணைய தூவி நல்லா உருகவிட்டு... அதுல கலக்கி வச்ச முட்டைய ஊத்தி... பட்டும் படாம... கிளிஞ்சும் கிளியாம... அழகா கிளரி விட்டு... அதை அப்டியே தனியா எடுத்து வச்சுக்கனும்...
மறுபடியும் அதே பாத்திரத்துல ஒரு ஸ்பூன் வெண்ணைய போட்டு உருக வச்சு... 8 பல் பூண்ட பொடிசா துருவி போட்டுக்கனும்... கூடவே லைட்டா மிளகு தூளையும்... அரை ஸ்பூன் கார்ன்பிளார் மாவையும் தூவி விட்டு... லைட்டா மிக்ஸ் பண்ணிக்கனும்...
அதுகப்புறம்... அரை கப் பாலை ஊத்தி... அரை ஸ்பூன் சில்லி ஃளேக்கையும் தூவி விட்டு... நல்லா க்ரீம் பதத்துக்கு வர வரை கிளரி விடனும்...
க்ரீம் பதத்துக்கு வந்ததும்... அதுல லைட்டா கொத்தமல்லியும்... கூடுதல் டேஸ்டுக்கு கரம் மசாலாவும்... தூவி விட்டு மறுபடியும் கிளரிவிடனும்...
பைனல்லா... முதல்ல பொரிச்சு வச்ச முட்டைய இந்த க்ரீம் குள்ள போட்டு... நல்லா கிளரி விட்டு எடுத்தா... அசத்தலான... டேஸ்ட்டியான... Butter Garlic Egg ரெடி...
அப்புறம் என்ன இனி... வீட்டுல ரசம் வச்சாலும் சரி... சாம்பார் வச்சாலும் சரி... இந்த Butter Garlic Egg - ஐ துணைக்கு வச்சுகிட்டு இன்னைக்கு ஒரு புடி புடிக்க வேண்டியது தான்...