"போர் நிறுத்தம்..?" - பெரிய குண்டை போட்ட இஸ்ரேல் பிரதமர் | Israel | War
போர் நிறுத்தம் செய்வது பயங்கரவாதத்திடன் சரணடைவதற்கு சமம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
டெல் அவிவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் பயங்கரவாத கோடாரியாக ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருவதாக கூறினார். பேர்ல் ஹார்பர் தாக்குதல் மற்றும் இரட்டை கோபுரம் தாக்குதலின் போது அமெரிக்கா எவ்வாறு போர் நிறுத்தத்தை அறிவிக்க முடியாது என்றதோ, அதே போன்று, அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலால் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை ஏற்காது என்றார். போர் நிறுத்தம் செய்வது, ஹமாஸிடம், பயங்கரவாதத்திடம் சரண்டைவதற்கு சமம் என்ற நெதன்யாகு. அது ஒருபோதும் நடக்கவே நடக்காது என்று திட்டவட்டமாக கூறினார். பொதுமக்களின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதாக கூறிய அவர், பொதுமக்கள் உயிரிழப்பதை குறைப்பதன் மூலம், வெற்றியை அடைவோம் என்றார்.