இஸ்ரேல் போர்.. மத்தியஸ்தத்துக்கு நுழைந்த அரபு தேசம்.. போர் உக்கிரமாகி அடங்க வாய்ப்பு

Update: 2023-10-10 09:30 GMT

காசாவில் போர் வந்தால் பதுங்க பதுங்குக் குழிகள் கூட கிடையாது என கூறப்படும் நிலையில், மக்கள் ஐநா பள்ளிகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்... சுமார் 73 ஆயிரம் பேர் வரை அங்கு தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது... பாலஸ்தீனியர்கள் மட்டுமல்லாது மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் சமரச முயற்சிகள் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது... பாதுகாப்பிற்காக இஸ்ரேல் சண்டையிட்டாலும் சர்வதேச சட்டங்களைப் பின்பற்றி இஸ்ரேல் செயல்பட வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் அறிவுறுத்தி இருந்தார்... இஸ்ரேல் செய்திகள் சொல்வதைப் பார்க்கையில் போர் இன்னும் உக்கிரமாகியே அடங்கும் என தெரிகிறது... கத்தார் சமரச முயற்சியைத் துவங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சமாதானம் ஏற்பட இன்னும் சில காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்