ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் பதவிநீக்கம் செய்யப்பட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் ராணுவ கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதித்தது. இதைக் கண்டித்து நைகரின் தலைநகர் நியாமியில் ராணுவ ஆதரவாளர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர்.