சூரிய புயலால் இந்திய ராணுவத்துக்கு பாதிப்பா? - இஸ்ரோ சொன்ன புதிய தகவல்

Update: 2024-05-15 07:49 GMT

சூரிய புயல் காரணமாக செயற்கைக்கோள்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்று இஸ்ரோ தொடர்ந்து கண்காணித்து வருகிறது...மே 11ம் தேதி சூரியனில் ஏற்பட்ட புயலை இஸ்ரோ, சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட "ஆதித்யா எல் 1" செயற்கைகோளைப் பயன்படுத்தி தரவுகளை பதிவு செய்து ஆராய்ந்து வருகிறது... ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மையங்கள் மூலமும் சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் மூலமும் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து வருகின்றன. கடந்த 2003ஆம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட சூரிய புயலின் காரணமாக வழிகாட்டு அமைப்பான ஜி.பி.எஸ் சேவை மற்றும் பல செயற்கைக்கோள் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் தற்போது இந்த பகுதியில் சூரிய புயல் ஏற்பட்டுள்ளது... இந்த சூரியப் புயல் காரணமாக ஏற்படும் காந்த விசை புயல் இந்தியா சார்பில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்களில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்து இஸ்ரோ தொடர்ந்து கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு வழிகாட்டு தரவுகளையும், வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு காலநிலை குறித்தான தரவுகளையும் அனுப்பும் இஸ்ரோவின் "இன்சாட்" செயற்கைக்கோள்கள் தொடர்ச்சியாக நல்ல நிலையில் செயல்பட்டு வருவதாகவும், இன்சாட் - 3டிஆர் செயற்கைக்கோள் மட்டும் சில செயல்பாடுகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்