"கைரேகை மட்டுமே போதும்.." - ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை

Update: 2024-01-04 07:03 GMT

மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவுவது மேமோகிராம் பரிசோதனை... பெரும்பாலும் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வருடம் ஒருமுறை இந்த பரிசோதனையை செய்து பார்த்தால் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்க முடியும் என்று மருத்துவர்கள் கூறும் நிலையில், இனி வரும் காலங்களில் மேமோகிராம் பரிசோதனை கூட தேவையில்லை கைரேகை மட்டுமே போதுமானது என்று இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்... கைரேகைகளில் படிந்திருக்கும் வியர்வைத் துளிகளைக் கொண்டு இதைக் கண்டுபிடிக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... வியர்வையில் பல்வேறு மூலக்கூறுகள் இருந்தாலும் புரதங்களை ஆராய்ந்து பார்க்கையில் ஒரு நோயாளிக்கு ஆரம்ப நிலை புற்றுநோய் உள்ளதா, புற்றுநோய் பரவுகிறதா என்பதை செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கண்டறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்