"இந்தியாவுக்கு இப்போது இல்லை.." சீனாவில் கிடைத்த கிரீன் சிக்னல்.. புதிய தடத்தை பதிக்கும் எலான் மஸ்க்

Update: 2024-05-01 03:48 GMT

உலகின் மிகப் பெரிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளார். இந்நிலையில் திடீரென்று சீனா சென்றா எலான் மஸ்க், சீன பிரதமர் லி கியாங்கை திங்களன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து டெஸ்லா கார்களுக்கான டேடா பாதுகாப்பு அனுமதியை சீன அரசு வழங்கியுள்ளது. ஓட்டுனர் இல்லாத தானியங்கி டெஸ்லா கார்களை சீனாவில் இயக்க, சீன அரசு நிறுவனங்களும், சீன ராணுவமும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. தானியங்கி முறையில் இயக்க, சீன நகரங்களின் சாலைகள் பற்றிய முழு தகவல்களை டெஸ்லா நிறுவனம்

சேகரிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், சீன பிரதமரை எலான் மஸ்க் சந்தித்த பின், இதற்கான அனுமதியை சீன அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பைடு என்ற சீன இணைய தள தேடுதல் எந்திர நிறுவனத்துடன் டெஸ்லா நிறுவனம் இது தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்