சண்டைக்கு அழைப்பு விடுத்த எலான் - சவாலை ஏற்ற மார்க் ஜுக்கர்பெர்க் -ட்விட்டரில் நேரலை..
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கோடு கூண்டில் சண்டையிட தயார் எனவும், அதற்கு அவர் தயாரா எனவும் சவால் விடுத்திருந்தார். சவாலை ஏற்ற மார்க், சண்டைக்கான இடத்தை தெரிவிக்குமாறு கூறியிருந்தார். இதனால் இருவரும் மோதிக்கொள்வார்களா என பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் தங்களுக்கு இடையேயான சண்டை, ட்விட்டரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் இணைவாசிகளிடையே எதிர்பார்ப்பும், மீண்டும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. சண்டை எப்போது நடைபெறுமென அவர்கள் கேள்வியெழுப்ப தொடங்கியுள்ளனர்.