மீன்கள், நண்டுகளுக்கு கொரோனா சோதனை | கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை
கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு மூலம் சிறிய அளவிலான கொரோனா பரவலையும் உடனுக்குடன் சீன அரசு தடுத்து நிறுத்தி வருகிறது...
கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு மூலம் சிறிய அளவிலான கொரோனா பரவலையும் உடனுக்குடன் சீன அரசு தடுத்து நிறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஸியமென் நகரில் மீன் பிடி படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட கடலினங்கள் அனைத்திற்கும் உடனுக்குடன் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது.
மீன்பிடி படகுகளில், பாதுகாப்பு உடை அணிந்த சீன சுகாதாரத்துறை பணியாளர்கள், கொரோனா சோதனைகளில் ஈடுப்படும் காட்சிகள்..
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் உலகெங்கும் வைரலாகியுள்ளன.
வெளிநாட்டு கப்பல்கள், படகுகளுடன் சட்ட விரோதமாக வணிகத்தில் ஈடுபடும் மீன்பிடி படகுகள் மூலம் சீனாவில் மீண்டும் கொரோனா பரவுவதாக கூறியுள்ள ஸியமென் நகராட்சி அதிகரிகள், கொரோனா சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.