அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஜோ பைடனின் வெற்றிவாய்ப்பு மிகவும் குறைந்து வருவதாக முன்னாள் அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதை பைடன் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தனது ஆதரவாளர்களிடையே ஒபாமா கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொது இடங்களில் ஜோ பைடனின் குழப்பமான பேச்சுக்களால் சொந்த கட்சியினர் அதிருப்தி அடைந்து வரும் நிலையில், போட்டியிலிருந்து விலக பைடன் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.