அமெரிக்கன் ஏர்லைன்ஸை புரட்டிப்போட்ட மைக்ரோசாப்ட்

Update: 2024-07-19 14:10 GMT

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் சேவைகளில்

ஏற்பட்ட குளறுபடிகளினால், அமெரிக்காவில் விமான

சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு

நிறுவனங்கள், இணையம் மூலம் செயல்படும் மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகளை பயன்படுத்துகின்றன.

டிக்கெட் விற்பனை, தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து

பணிகளுடம் இணையம் வழியாக மைக்ரோசாப்ட் கிளவுட்

மூலம் முன்னெடுக்கப்படுகின்றன.

மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகளில் நேற்று ஏற்பட்ட

குளறுபடிகளினால், அமெரிக்காவில் விமான சேவைகள்

பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என்ற மிகப் பெரிய விமான சேவை நிறுவனத்தின் விமான சேவைகள் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

வியாழன் மாலை 6 மணி அளவில், கிளவுட் சேவைகளில்

பாதிப்பு உருவானதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

மைக்ரோசாப்ட்டின் வின்டோஸ் ஓ.எஸ்ஸை பயன்படுத்தும்

பல ஆயிரம் கம்யூட்டர்கள், லேப்டாப்கள் தற்போது செயல்

இழந்து, நீலத் திரையாக மாறியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்