ஹிஜாப் போராட்டக்காரர்கள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம்

Update: 2022-10-16 10:08 GMT

ஹிஜாப் போராட்டக்காரர்கள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அரசியல் கைதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஜாப் விவகாரத்தில் மர்ம மரணம் அடைந்த மாஷா அமினியின் இறப்புக்குப் பிறகு, அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஈரானை பல வாரங்களாக வாட்டி வதைத்து வருகின்றன.

இந்த சூழலில் எவின் சிறைச்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அப்போது துப்பாக்கிச்சூடு சப்தங்கள் மற்றும் எச்சரிக்கை ஒலியும் கேட்டதால் சிறைக்கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலையின் பிரதான கதவிற்கு முன்பாக குவிந்தனர்.

இந்த விபத்திற்கும் சமீபத்திய ஆர்ப்பாட்டங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை.

ஆனால், ஹிஜாப் போராட்டக்காரர்கள் எவின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்த பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஆனால், சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இடையே நடந்த மோதலால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்