இது மட்டும் நடக்கவே கூடாதுநடந்தால் Confirm கருணைக்கொலைDog Lovers-க்கு விழுந்த பேரிடி..

Update: 2023-09-21 01:45 GMT

கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்த்தொற்றுகள் ஏராளம். காசநோய் தொடங்கி, நிமோநியா, பிலேக், காலரா என எண்ணற்ற நோய்கள் பாக்டீரியாக்களால் மனிதர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்துகின்றன.இந்நிலையில், பாக்டீரியா மூலம் பரவும் ப்ரூசெல்லா கேனிஸ் என்ற விசித்திர நோய் இப்போது நாய்களை தாக்க தொடங்கியுள்ளது. இந்நோய்த் தொற்று, தாக்கும் நாய்களிடம் கருத்தரிப்பின்மை, நடப்பதில் சிரமம், போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனிடையே, இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் ஒரு சில நாய்கள் எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நாயின் எச்சில் அல்லது உடலிலிருந்து வெளியேறும் சிறுநீர், ரத்தம் போன்ற திரவங்கள் மூலமாக மனிதர்களுக்கும் இந்நோய் தொற்று பரவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்நோய் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.அந்த வகையில், இந்த விசித்திர நோயால் இங்கிலாந்தில் இதுவரை 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் இந்நோய் பரவல் நாய்களிடம் அதிகரித்து காணப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.இதற்கான முறையான மருத்துவ சிகிச்சை எடுக்காவிட்டால், மனிதர்களுக்கு மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே, இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நாய்களை குணப்படுத்த முடியாது என்று தெரிவிக்கும் கால்நடை மருத்துவர்கள், நோய் பரவலை தடுக்க, பாதிக்கப்பட்ட நாய்களை கருணைக்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.அதேவேளையில், மனிதர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டால், ஆண்டிபயாடிக் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்