அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், கடும் பனிபொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல மாகாணங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், தரையிலும், சாலைகளிலும் பல அடி உயரத்திற்கு உறைபனி மூடி காணப்படுகிறது. இதனால், பல பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் குடிநீர் மற்றும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடுங்குளிர் காரணமாக, மின்தேவையும் அதிகரித்துள்ளது. இதனிடையே, டெக்சாசில் உள்ள ஆலன் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில், குறைந்த வெப்ப நிலை காரணமாக, நீச்சல்குளத்திற்கு பயன்படுத்தப்படும் உபகரணம் வெடித்து சிதறியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.