பேஸ்புக்கின் முக அடையாள தரவுகள் அழிக்க முடிவு - முக அடையாள தொழில்நுட்பத்தால் பிரச்சனை என விளக்கம்
100 கோடி பயனாளர்களின் முக அடையாள தரவுகளை அழிக்க உள்ளதாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.
100 கோடி பயனாளர்களின் முக அடையாள தரவுகளை அழிக்க உள்ளதாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்டா வெளியிட்ட அறிக்கையில், சமூக வலைதளம் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மோசமான நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், சமூகத்தில் முக அடையாள தொழில்நுட்பத்தால் பல்வேறு பிரச்சனை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், பேஸ்புக்கின் தனிநபரின் முக அடையாள தரவுகளை அழிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பேஸ்புக் பெயர் மெட்டா என மாற்றப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.