கனடாவின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சர் - தமிழ் வம்சாவளி அனிதா ஆனந்த் நியமனம்

கனடாவின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-10-27 08:46 GMT
சமீபத்தில் நடந்து முடிந்த கனடா நாட்டு பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் ஆனார். லிபரல் கட்சி சார்பில் ஓக்வில்லே தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் வெற்றி பெற்ற நிலையில், மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில், புதிய பாதுகாப்பு அமைச்சராக அனிதா ஆனந்தைப் பதவியமர்த்தி அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். அனிதாவின் தந்தை தமிழகத்தையும், தாயார் பஞ்சாப் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்