ஸ்பெயினில் "கும்ப்ரே விஜா" எரிமலை வெடிப்பு - புகை, சாம்பலை வெளியேற்றும் எரிமலை

ஸ்பெயின் நாட்டின் லா பால்மா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் காரணமாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-20 03:45 GMT
கடந்த சில நாட்களாக கேனரி தீவைச் சுற்றி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில் "கும்ப்ரே விஜா" எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. எரிமலை வெடித்து புகை மற்றும் சாம்பலை வெளியேற்றுவதால் தீவைச் சுற்றியிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது ஐ.நா. சபை கூட்டத்தை ரத்து செய்து உடனடியாக லா பால்மா கேனரி தீவுக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்