இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு- பாகிஸ்தானில் பரபரப்பு சம்பவம்
பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தில் லோயர் தீர் மாவட்டத்தில் இறுதி ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இதில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 15 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நில தகராறில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.