லூசியானாவில் இடா புயல் பாதிப்பு - பாதிக்கப்பட்ட இடங்களை பைடன் பார்வையிட்டார்
இடா புயலால் பாதிகப்பட்ட அமெரிக்காவின் லுசியானா மாகாணத்திற்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இடா புயலால் பாதிகப்பட்ட அமெரிக்காவின் லுசியானா மாகாணத்திற்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுவரை புயல் பாதிப்பால் கிட்டத்தட்ட 46 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட அதிபர் பைடன், மின் தடை ஏற்பட்ட இடங்களில் விரைவில் நிலைமை சரி செய்யப்படும் என்று தெரிவித்தார். லூசியானா ஆளுநரைச் சந்தித்ததுடன், புயல் பாதிப்பு நிலவரங்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.