ஆப்கானிஸ்தானில் கொரோனா தடுப்பு; தலிபான்களால் பின்னடைவு? - உலக சுகாதார நிறுவனம் கவலை

தலிபான்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

Update: 2021-08-19 04:56 GMT
தலிபான்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.வறட்சி, கொரோனா தொற்று என ஏற்கெனவே பல்வேறு இடர்பாடுகளில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பேரிடியாக விழுந்திருக்கிறது தலிபானின் வெற்றி.உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா தொற்று ஆப்கானிஸ்தானையும் விட்டுவைக்கவில்லை. அதனை எதிர்த்து தடுப்பூசி, கட்டுப்பாடு நடவடிக்கை என முன்னெறிக்கொண்டிருந்த ஆப்கானிஸ்தானுக்கு தற்போதைய கையறுநிலை மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.கொரோனா இரண்டாம் அலையில் சிக்கிய ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் தான் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. அங்கு இதுவரை 2 சதவீத மக்கள் தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அதிலும் 2 டோஸ்களை செலுத்திக்கொண்டவர்கள் வெறும் பூஜ்ஜியம் புள்ளி 68 சதவீத மக்கள் தான்.ஆப்கானிஸ்தானில் இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 363 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 927 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு அங்கு இதுவரை 7 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போதை நிலவரப்படி அங்கு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 393. இதில் ஆயிரத்து 124 பேர் தீவிர நோய் பாதிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இனிவரும் நாட்கள் கொரோனா பாதிப்பில் ஆப்கானிஸ்தானுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்கிற கருத்து நிலவுகிறது.காபூலை கைப்பற்றுவதற்கு முன்பே தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகளில் தடுப்பூசி பயன்பாட்டை தலிபான் தடை செய்தது. தற்போது நாடு முழுவதும் தலிபான் வசம் இருப்பதால், கொரோனா தடுப்பில் இது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்தில் கூடியது குறித்தும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தளர்ந்திருப்பது குறித்தும் உலக சுகாதார நிறுவனம் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்