அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் - முதல் செய்தியாளர் சந்திப்பு

ஆப்கனின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, தலிபன்கள் முதல் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Update: 2021-08-18 05:27 GMT
ஆப்கனின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, தலிபன்கள் முதல் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தலிபன்களின் பிரதிநிதி, ஜபிஹுல்லா முஜாஹித், தாங்கள் உள்நாட்டிலும், சரி வெளி நாடுகளிலும் சரி எதிரிகளை விரும்பவில்லை எனவும், அனைவருடனும் நல் உறவைத் தொடர்ந்து தங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் வளத்தையும் மேம்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும், பலம் வாய்ந்த இஸ்லாமிய அரசு நிறுவப்படும் எனவும், எந்த ஆப்கன் அரசியல்வாதியும் நிராகரிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளுடன் பணியாற்றும் மக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்தார். அத்துடன், ஆப்கனை மறு உருவாக்கம் செய்ய தங்கள் நாட்டு இயற்கை வளங்களே பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், போதைப்பொருட்கள், ஆயுதங்கள் கடத்தல்கள் நடைபெறாது எனவும், அனைத்து ஆப்கன் எல்லைகளும் தலிபன் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இஸ்லாஅமிய விதிகளின் படி பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பெண்கள் சமூகத்தில் முக்கியப்பங்காற்றுவதால், தங்கள் மத விதிகளின் படி அவர்களுக்கு தக்க உரிமைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் மேலும், ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு தப்பினாலும், அரசியல் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் கட்டாரில் இருந்து மீண்டும் ஆப்கன் திரும்பியிருப்பது நல்ல முன்னேற்றமாக ப் பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்