நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி.. வெளியேறும் முன் வீடியோ வெளியிட்ட அஷ்ரப் கனி
நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி.. வெளியேறும் முன் வீடியோ வெளியிட்ட அஷ்ரப் கனி
நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி.. வெளியேறும் முன் வீடியோ வெளியிட்ட அஷ்ரப் கனி
அதிபர் அஷ்ரஃப் கனி, நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தான் சென்று விட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஆப்கன் தலைநகர் காபூலை தாலிபன் போராளிகள் சூழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாட்டின் பாதுகாப்பை ராணுவ அமைச்சகமும், தேசிய பாதுகாப்பு படையும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், தொலைத்தொடர்பு சேவை பொதுமக்களுக்கு தொடர்ந்து கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்றும், அந்த வீடியோவில் கூறியுள்ளார். பொதுமக்கள் தங்கள்து தொலைபேசி மூலம், அரசுத்துறை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என்றும் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வெளியாக சில மணி நேரத்தில், அந்நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தான் சென்றுவிட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அஷ்ரப் கனி உடன், அந்நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சாலேயும் நாட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளையும் தாலிபன்கள் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.