இந்திய - ஆப்கான் உறவு பாதிக்குமா?

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறுவதால், அந்த நாட்டில் சீனா ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டுகிறது.

Update: 2021-07-07 06:52 GMT
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறுவதால், அந்த நாட்டில் சீனா ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டுகிறது. இதனால், இந்தியாவிற்கு எந்த வகையில் அச்சுறுத்தல் இருக்கும் என்பதை அலசுகிறது, இந்த தொகுப்பு... தாலிபான்கள் தாக்குதல், அமெரிக்க படைகள் பதிலடி என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை சச்சரவுடன் தகித்துக்கொண்டிருக்கும், நாடு..2001 செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் படைகளை இறக்கிய அமெரிக்கா, அங்கு ஆட்சியில் இருந்த தாலிபான்களை ஆட்சி இழக்க வைத்தது...பின்னர் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு தாலிபான்களுடன் சண்டையிட்டு வந்த அமெரிக்கா, 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடனை சுற்றிவளைத்து கொன்றது.தொடர்ந்து அமெரிக்க - தாலிபான்கள் இடையே சண்டை நீடித்து வந்த நிலையில், 2020ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் முக்கிய அம்சமாக படைகளை வாபஸ் பெற அமெரிக்கா சம்மதம் தெரிவித்தது
புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், நியூயார்க் தாக்குதல் தினமான செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்