கனடாவை கதிகலங்க வைக்கும் வெப்பம் - வனப்பகுதிகள் அழியும் அபாயம்
வெப்பநிலை அதிகரிப்பால் கனடா கதிகலங்கி வரும்நிலையில், அங்கு காட்டுத் தீ பரவலும் அதிகரித்து வருகிறது.
வெப்பநிலை அதிகரிப்பால் கனடா கதிகலங்கி வரும்நிலையில், அங்கு காட்டுத் தீ பரவலும் அதிகரித்து வருகிறது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வனப்பகுதிகளில் தற்போது காட்டுத் தீ, பரவி வருகிறது. இதனால், லட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்பிலான வனப்பகுதிகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணி, அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெப்பக்காற்றால் அங்கு மின்னல் தோன்றுவதாகவும், இதனால் காட்டுத் தீ ஏற்படுவதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்து உள்ளனர்.