இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு அனுமதி? - ஸ்புட்னிக் தடுப்பூசி குறித்து இன்று ஆய்வு

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது குறித்து நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.

Update: 2021-04-12 11:34 GMT
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது குறித்து நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது. ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்(sputnik) என்ற கொரோனா தடுப்பூசியை, இந்தியாவில் ரெட்டிஸ் லேப் என்ற தனியார் நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்த‌து. இது குறித்து மத்திய நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது. இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டை குறைக்க கூடுதல் தடுப்பூசி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்