உருமாறும் வைரஸ்:பாதிப்பு என்ன?- "மனித உடலுக்குள் எளிதாக நுழைய முடியும்"

கொரோனா வைரசின் மாறுபாட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன.. தீர்வு என்ன என்பது குறித்து விளக்குகிறது பிபிசியின் இந்த செய்தி தொகுப்பு...

Update: 2020-12-22 03:20 GMT
அதிவேக பரவலை தொடர்ந்து, உலக நாடுகள் பல இங்கிலாந்தில் இருந்து தங்கள் நாடுகளுக்கு வந்து போகும் விமான சேவையை ரத்து செய்துள்ளன. ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், அயர்லாந்து, துருக்கி போன்ற நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளன. இந்நிலையில், பிரான்ஸ் ஒரு படி மேலே சென்று இங்கிலாந்து உடனான தனது எல்லைகளை மூடியதால், இங்கிலாந்து - பிரான்ஸ் எல்லை பகுதியில் சரக்கு லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன.

காபூலில் வெடிகுண்டு தாக்குதல் 8 பேர் உயிரிழப்பு - 15 பேர் படுகாயம்
ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் அறிக்கை

ஆப்கானிஸ்தான் தலைநகர், காபூல் அடுத்த ஸ்பின் குலி பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில், எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் ஆப்கானிஸ்தானின் எதிரிகள் நடத்திய அந்த தாக்குதலில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட, 15 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, தலிபான் போராளிகளுக்கும், ஆப்கன் அரசுக்கும் இடையே அமெரிக்காவின் மேற்பார்வையில், சமாதான பேச்சு வார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீச்சு - கார்கள், கட்டிடங்கள் சேதம்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஞாயிறு அன்று ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட ஒரு ஆயுதப் போராளி குழு, 8 ராக்கெட்டுகளை தூதரகத்தின் மீது ஏவியதாக ஈராக் ராணுவம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு ஈராக் காவலர் காயமடைந்தார். குடியிருப்பு பகுதியும், சில கார்களும் சேதமடைந்தன. ஈரானின் முக்கிய ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், அதற்கு பழி வாங்கும் விதத்தில் இது போன்ற தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானில் இந்திய உணவு கடைகள் - எதிர்ப்புகளை சந்தித்த "இந்தியன் ரெஸ்டாரன்ட்"

பாகிஸ்தானில் கலக்கும் இந்திய பெயர் கொண்ட உணவுக்கடைகள் குறித்து பிபிசியின் ஸ்பெஷல் செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்... 

Tags:    

மேலும் செய்திகள்