சமூக இடைவெளியை மறந்த தொண்டர்கள் - முகக்கவசம் அணியாத பொதுமக்கள்
கொரோனா தொற்று காரணமாக, உள் அரங்குகளில் தேர்தல் பிரசார கூட்டம் நடத்த வேண்டாம் என அமெரிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இருந்த போதிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப், உள் அரங்குகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது,. மேலும் பிரசாரத்தில் பங்கேற்கும் தொண்டர்கள் முகக்கவசம் அணியாமலும், நெருக்கமாகவும் பங்கேற்பதால் கொரோனா தொற்று மேலும் பரவ வழிவகுப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன,.
"கப்பலில் தீ விபத்து - எண்ணெய் கசிவு இல்லை"
இலங்கை கடற்பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட கச்சா எண்ணெய் கப்பலில், இலங்கை கடற்படை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கப்பலில் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட நிலையில், விபத்தின் காரணமாக கப்பலின் கொள்கலன் பகுதியல் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படவில்லை எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் இலங்கை கடற்படையின் துரித நடவடிக்கையால் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டு, பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை கடைபிடிக்க புதிய முயற்சி - உணவு வழங்கும் ரோபோ-வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
கொரோனோ கட்டுப்பாடு காரணமாக, தென் கொரியாவின் சியோல் நகரில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கும் பணியை ரோபோ ஒன்று செய்து வருகிறது,. வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உணவை, தானியங்கி ரோபோ வாடிக்கையாளர்களிடன் பத்திரமாக கொண்டு சேர்க்கிறது,. இதனால் அந்த உணவகத்தில் உணவருந்த வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்,.
பேக்கரியில் பணியாற்றிய இளவரசர் வில்லியம் - மாவு பிசைந்து தின்பண்டம் தயாரித்த இளவரசர்
பிரிட்டனின் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோர் லண்டனில் உள்ள பேக்கரியில் தின்பண்டங்ள் செய்யும் பணியில் ஈடுபட்டனர்,. இருவரும் மாவு பிசைந்து "பேகல்" எனப்படும் பலகாரத்தை தயாரித்தனர்,. நோய் தொற்று காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில், மக்களுடன் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவே இளவரசர் வில்லியம் பேக்கரியில் பணி செய்ததாக கூறப்படுகிறது,.
நிலத்தை தூய்மை செய்யும் வாத்துக்கள் - தாய்லாந்து விவசாயிகளின் புதிய முயற்சி
தாய்லாந்து நாட்டில், நெல் அறுவடை செய்யப்பட்ட நிலத்தை தூய்மைப்படுத்த விவசாயிகள் வாத்துக்களை பயன்படுத்துகின்றனர்,. அடைத்து வைக்கப்பட்டுள்ள பண்ணையில் இருந்து திறந்து விடப்படும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துக்கள் நிலத்தில் உள்ள நத்தை, புழுக்கள் போன்றவற்றை சாப்பிடுகின்றன,. இதனால் சில மணி நேரங்களில் நிலம் தூய்மையடைவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்,.
குரங்கு எடுத்த செல்ஃபி வீடியோ - சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படம்
மலேசியாவில், ஒருவர் காணாமல் போன தனது செல்போனை வீட்டு அருகேயுள்ள தோட்டத்தில் கண்டுபிடித்துள்ளார்,. அதில் குரங்கு ஒன்று எடுத்த செல்பி புகைப்படமும் வீடியோவும் இருந்ததை பார்த்த அவர், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்,.
புதிய அம்சங்களுடன் ஆப்பிள் வாட்ச் -6 அறிமுகம் - "ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை கண்டறியும் வசதி "
ஆப்பிள் நிறுவனம் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கண்டறியும் வசதியுடன் கூடிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது,. இதன் விலை இந்திய மதிப்பில் 40 ஆயிரத்து 900 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,.அதேபோல், ஐபேட் 8th ஜென்ரேஷன் மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது,. புதிய ஐபேட் 10 புள்ளி 2 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளேயுடன் இருக்கும் எனவும் இதன் விலை 399 அமெரிக்க டாலர் என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.