மெல்லிய இலையில் அசத்தல் ஓவியம் - புதிய வேலையை உருவாக்கிய இளம்பெண்

பிலிப்பைன்ஸ் நாட்டின் லகுவானா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், மெல்லிய இலையில், ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார்.

Update: 2020-09-05 07:12 GMT
பிலிப்பைன்ஸ் நாட்டின் லகுவானா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், மெல்லிய இலையில், ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த 23 வயதான மேரிமே என்ற இளம்பெண், காய்ந்த மற்றும் பச்சை இலைகளில், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ, மைக்கேல் ஜாக்சன், கொரோனா முன்கள பணியாளர்களின் உருவங்களை வரைந்து அசத்துகிறார். ஒரு இலை ஓவியம் இந்திய மதிப்பின்படி 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கலிபோர்னியாவில் அதிகரிக்கும் வெப்பம் - விலங்குகளுக்கு நீர் சத்து மிகுந்த உணவுகள் 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் உயிரியல் பூங்காவில், வெப்பத்தில் இருந்து விலங்குகளை காக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பராமரிக்கப்படும் ஆயிரத்து, 400 விலங்குகளுக்கும் கேரட், ஆப்பிள், ஆரஞ்சு உள்பட பல்வேறு நீர் சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் வெப்பம் நோய்களால் விலங்குகள் இறப்பதை தவிர்க்க முடியும் என பூங்கா பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சமத்துவமின்மையை கண்டித்து போராட்டம்  - நீர் பீய்ச்சி அடித்து மக்களை கலைத்த போலீஸ் 

சிலியில் நிலவும் சமத்துவமின்மையை கண்டித்து, அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு தளர்வுகளால் தலைநகர் சாண்டியாகோவில் திரண்ட மக்கள் அதிபர் செபாஸ்டியன் பினேராவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அங்கு வந்த சிலி போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடித்து மக்களை கலைத்தனர். ஆங்காங்கே சிதறி ஓடிய மக்கள் போலீஸ் மீது ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தினர்.  
Tags:    

மேலும் செய்திகள்