சர்வதேச காணாமல் போனவர்கள் தினம் அனுசரிப்பு-உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையின் மன்னாரில், சர்வதேச காணாமல் போனவர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.
இலங்கையின் மன்னாரில், சர்வதேச காணாமல் போனவர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை ஒட்டி நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்று காணாமல் போன தங்களது உறவினர்கள் மீட்டு தர கோரி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில், காணாமல் போனவர்களுக்காக நினைவகம் அமைக்கப்பட வேண்டும் என்றும்,கோரிக்கை மனுக்கள் கையெழுத்திடப்பட்டு மன்னார் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வன்னி மாவட்டஎம்.பி. சார்லஸ் நிர்மலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.