பாகிஸ்தானை கண்டித்து நியூயார்க், லண்டனில் ஆர்ப்பாட்டம்
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுவதை கண்டித்து நியூயார்க்கில், பாகிஸ்தானில் இருந்து வந்த சிறுபான்மை அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுவதை கண்டித்து நியூயார்க்கில், பாகிஸ்தானில் இருந்து வந்த சிறுபான்மை அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
ரஷ்யாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலை - அதிபர் புதின் காரில் பயணித்து முன்னோட்டம்
ரஷ்யாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டேவ்ரிடா நெடுஞ்சாலை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. கிரிமியா முதல் செவஸ்டாபோல் பெடரல் நகரை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலையில் முன்னோட்டமாக அதிபர் புதின் காரில் பயணம் மேற்கொண்டார். இதற்காக ஹெலிகாப்டரில்
அங்கு வந்த புதின் உற்சாகமாக காரை ஓட்டி
பயணம் மேற்கொண்டார்.
பெலாரஸ் நாட்டில் அதிபர் பதவி விலக கோரிக்கை - தலைநகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி
பெலாரஸ் நாட்டில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் அலெக்சாண்டர் லூகாஷென்கோ தொடர்ந்து 6-வது முறையாக மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் 4ஆவது வாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தலைநகரை நோக்கி ராணுவ வாகனங்கள் அணிவகுக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார் பார்கிங்கில் நடந்த இசைக்கச்சேரி - காரின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு ரசிகர்கள் ஆரவாரம்
இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில், நீண்ட நாட்களுக்கு பின் உள்ளூர் பாப் இசைக்குழுவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. உள் அரங்குகள் இன்றி கார் பார்க்கிங்கில் இந்த இசைக்கச்சேரி நடந்தது. இதில் காரில் அமர்ந்தவாறே முகக்கவசங்களுடன் பொதுமக்கள் இசைக்கச்சேரியை ரசித்தனர். கைதட்டுவதற்கு பதிலாக காரின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு தங்கள் ஆரவாரங்களை ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.