"தமிழ் மக்களின் பிரச்சினையில் மவுனம் சாதிப்பது ஏன்?" - இந்திய அரசுக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி
இலங்கையில் 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த உதவிய இந்திய அரசு, தற்போது தமிழ் மக்களின் பிரச்சினையில் மவுனம் சாதிப்பது ஏன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையில் 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த உதவிய இந்திய அரசு, தற்போது தமிழ் மக்களின் பிரச்சினையில் மவுனம் சாதிப்பது ஏன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று பங்கேற்று பேசிய யாழ்ப்பாணம் தொகுதி எம்.பி சிவஞானம் சிறிதரன் இந்த பிரச்சனையை எழுப்பினார். இலங்கை அரசுக்கு இந்தியா உதவியும் தற்போது வரை எந்த தீர்வும் கிடைக்க வில்லை என்று அவர் வேதனை தெரிவித்தார். அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் போர்க்காலத்தில் ஆயுதங்களை வழங்கி உதவி செய்திருந்த போதிலும் தீர்வு என்று வரும்போது எந்த நாடுகளும் ஆதரவை வழங்காதிருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.