சந்தை மதிப்பில் புதிய உச்சம் - சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. இது இந்திய மதிப்பில் 150 லட்சம் கோடி ரூபாயாகும்.

Update: 2020-08-21 03:57 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி டாலரை   எட்டியுள்ளது, இது இந்திய மதிப்பில் 150 லட்சம் கோடி ரூபாயாகும்.  ஒரு லட்சம் கோடி டாலர் மதிப்புடைய நிறுவனமாக மாற 44 வருடங்கள் எடுத்துக் கொண்ட ஆப்பிள் அதில்  இருந்து 2 லட்சம் கோடி டாலர் மதிப்பை இரண்டே ஆண்டுகளில் எட்டிப்பிடித்துள்ளது.  கடந்த ஜூலை 31ம் தேதி பிரபல எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவை ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளி, உலகின் மிகப்பெரிய நிறுவனமாக மாறியது குறிப்பிடத்தக்கது,. 2 டிரில்லியன் டாலர் என்ற சந்தை மதிப்பை கடந்துள்ள முதல் அமெரிக்க நிறுவனம் என்ற பெருமையையும் ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்