"வெளிநாட்டு மீனவர்கள் அத்து மீறி நுழைய கூடாது" - இலங்கை நாடாளுமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ச முதல் உரை

வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உரிய அனுமதி இல்லாமல் இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

Update: 2020-08-21 03:34 GMT
இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவிபேற்ற பிறகு முதல் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அதிபர், கோட்டாபய ராஜபக்ச, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு தடை விதித்து, உள்நாட்டு மீன்களை சந்தைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், உரிய அனுமதி இல்லாமல் இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்