சமூக வலைத்தள செயல்பாடு - பேஸ்புக் விளக்கம்
வன்முறையைத் தூண்டும் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தகவல்களை, யாருடைய அரசியல் நிலைப்பாடு மற்றும் கட்சி தொடர்புகளையும் கருத்தில் கொள்ளாமல் நீக்கி வருவதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வன்முறையைத் தூண்டும் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தகவல்களை, யாருடைய அரசியல் நிலைப்பாடு மற்றும் கட்சி தொடர்புகளையும் கருத்தில் கொள்ளாமல் நீக்கி வருவதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த நடைமுறை உலகளவில் செயல்படுத்தி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. செய்திகள் மற்றும் பதிவுகளின் உண்மைத்தன்மையை துல்லியமாக உறுதிப்படுத்த பல முன்னேற்ற நடவடிக்கைகள் மற்றும் வழக்கமான தணிக்கைகளை நடத்தி வருவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.