"ஜூலை மாதம் முதல் சர்வதேச சுற்றுலா" - ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் அறிவிப்பு
ஸ்பெயின் நாட்டில் சர்வதேச சுற்றுலா, ஜூலை மாதத்திலிருந்து துவங்கும் என அந்நாட்டு பிரதமர் சான்செஸ் அறிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் சர்வதேச சுற்றுலா, ஜூலை மாதத்திலிருந்து துவங்கும் என அந்நாட்டு பிரதமர் சான்செஸ் அறிவித்துள்ளார். தலைநகர் மேட்ரிட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜூன் மாதம், 8 ஆம் தேதி முதல், லா லிகா கால்பந்து விளையாட்டு போட்டிகள் துவங்க அனுமதி வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். ஸ்பெயினில், கொரோனாவால், 2 லட்சத்து 82 ஆயிரத்து 370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில், ஆயிரத்து 152 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 28 ஆயிரத்து 678 பேர் உயிரிழந்தனர்.