"இணைந்து பணியாற்றினால் வெற்றி கிடைக்கும்"- உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகின் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தொற்றை அழிக்க உதவும் மருந்து மற்றும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் இறுதிக் கட்ட நிலைக்கு முன்னேற்றம் கண்டு உள்ளதாக கூறப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தொற்றை அழிக்க உதவும் மருந்து மற்றும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் இறுதிக் கட்ட நிலைக்கு முன்னேற்றம் கண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கொரோனா தொற்று நோயை மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் சமமான விநியோகத்தால் மட்டுமே வெல்ல முடியும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வழக்கமான நடைமுறைகள் இதனை தடுக்க பயனளிக்காது என்றும், உலகம் முழுவதும் இணைந்து பணியாற்றினால் ஒழிய, கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவது சாத்தியமில்லை என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு அச்சம் தொடரும் எனவும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்