"உலக சுகாதார மையத்திற்கு தற்காலிமாக நிதி நிறுத்தம்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
உலக சுகாதார மையத்திற்கு அளித்து வரும் நிதியுதவி தற்காலிமாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலக சுகாதார மையத்துக்கு உலகின் பல்வேறு நாடுகளும் நிதியுதவி அளித்து வருகின்றன. அமெரிக்கா மட்டும் கடந்த ஆண்டில் 400 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி வழங்கி உள்ளது. இந்நிலையில் உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்படும் நிதி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செயதியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் தொடர்பாக உலக நாடுகளுக்கு போதிய எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு தரவில்லை எனவும் அதனால் எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறினார். சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக குற்றம் சாட்டிய டிரம்ப், சீனாவில் இருந்து வந்தவர்களை அமெரிக்கா தடுத்தபோது, அதற்கு உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார்.